கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள அலுவலகர்களின் இடமாற்றம் தொடர்பில் வெளியான தகவல்
கோவிட் தொற்று காரணமாக 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைமுறைப்படுத்தவிருந்த இடமாற்றங்கள் இம்மாதம் செப்டெம்பர் 21ம் திகதிக்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்துள்ளார்.
இதன்போது இடமாற்றம் வழங்கிய புதிய நிலையத்திற்கு சென்று கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்ளுமாறும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் கையொப்பமிட்ட கடிதம் அனைத்து நிறுவன தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.
கோவிட் -19 காரணமாக 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைமுறைப்படுத்தப்பட்ட இடமாற்றங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தபட்டதாகவும் ,இம்மாதம் செப்டெம்பர் 21ம் திகதிக்கு முன்னர் இடமாற்றம் வழங்கிய புதிய நிலையத்திற்கு சென்று கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை போன்ற பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கு கடிதம் மூலம் இடமாற்றம் தொடர்பாக அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் 2021 ஆம் ஆண்டின் வருடாந்த இடமாற்ற சபையின் முடிவுகள் எமது இணையத்தளமான EP.gov.lk எனும் மாகாண சுகாதார சேவைகள் வலைப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் மேலும் தெரிவித்துள்ளார்.
போலீஸ் நிலையத்தில் மயிலை அடிக்கச்சென்ற கோமதி, ஆதாரத்தை காட்டிய மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு எபிசோட் Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு குறித்து ஏன் கேட்கக்கூடாது? சான்ட்ராவின் நடிப்பை அம்பலப்படுத்திய போட்டியாளர்கள் Manithan