மலையக தொடருந்து சேவை குறித்து வெளியான அறிவிப்பு!
'டிட்வா' புயலால் கடுமையாக சேதமடைந்த தொடருந்து பாதையின் பகுதிகள் சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு மற்றும் பேராதனைக்கு இடையிலான வழக்கமான தொடருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
அதன்படி, மலையக தொடருந்து சேவைகள் ஒக்டோபர் 2 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
டிட்வா புயலால், ரம்புக்கனை மற்றும் கம்பளைக்கு இடைப்பட்ட 103 இடங்களில் சேதம் ஏற்பட்டிருந்தது. 36 பிரதான மண்சரிவுகள் உட்பட, மேலும் 67 இடங்களில் மண்சரிவு மற்றும் தொடருந்து பாதை அடித்து செல்லப்பட்டது.
தொடருந்து சேவைகள்
இந்த சேதங்கள் சீரமைக்கப்பட்ட நிலையில், கொழும்பு கோட்டை - பேராதனை மற்றும் பேராதனை - கம்பளை இடையிலான ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளன.

இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து பேராதனை மற்றும் கம்பளை நோக்கி இயங்கும் தொடருந்துகள் ஒக்டோபர் 2 ஆம் திகதி பிற்பகல் முதல் வழக்கமான கால அட்டவணையின்படி மீண்டும் இயங்கும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.