யாழில் வெளிநாட்டவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்து! கதறியழும் மகள்
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டுவில் - பன்றித்தலைச்சி அம்மன் கோவிலுக்கு அருகில் இன்று மாலை விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தின் போது விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். தனிமைப்படுத்தலுக்கு வெளிநாட்டவர்களை அழைத்து சென்ற பேருந்து மோதுண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் கோபம் அடைந்த மக்கள் பேருந்து சாரதி மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு அதிரடி படையினர் அழைக்கப்பட்டுள்ளனர். பெருமளவில் குவிக்கப்பட்ட அதிரடிபடையினரால் அங்கு மேலும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மரண வீட்டில் அரசியல்.. 1 நாள் முன்
இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம் News Lankasri