இலங்கையின் குட்டி லண்டனில் அலைமோதும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம்
குட்டி லண்டன் என அழைக்கப்படும் நுவரெலியாவிற்கு இலங்கையின் பல பகுதிகளை சேர்ந்த மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.
நுவரெலியாவில் காணப்படும் பல பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தளங்களை நாடி வருகை தரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
இதனால், உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் முழுவதும் நிரம்பி காணப்படுகின்றன.
நுவரெலியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் கிறகரி வாவி கரையில் சுற்றுலா பயணிகளை கவரும் களியாட்ட நிகழ்வுகளிலும், துவிச்சக்கர வண்டிச் சவாரி, படகு சவாரி மற்றும் மட்டக்குதிரை சவாரி செய்யும் இடத்திலும் தமது ஆர்வத்தை காட்டி வருகின்றனர்.






சிறகடிக்க ஆசை சீரியலில் புதிய என்ட்ரியால் ஷாக்கில் அண்ணாமலை குடும்பம்... மனோஜ் மாட்டிக்கொண்டாரா? Cineulagam