வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தாளையடி கடற்கரை....!
யாழ்.வடமராட்சி, கிழக்கு தாளையடி கடற்கரையில் தற்பொழுது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வருவதை காணக்கூடியதாக உள்ளது.
சுற்றுலாக்கு பிரசித்தி பெற்ற நாடுகளில் ஒன்றான இலங்கைத்தீவில் மே, யூன், யூலை, ஆகஸ்ட் போன்ற மாதங்களில் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் அதிகளவு வருவது வழமை.
அதுவும் இலங்கை தீவில் இயற்கை அமைவிடம், வரலாற்று இடங்கள், போர்க்காலத்தில் பாதிக்கப்பட்ட இடங்கள் என்பவற்றை பார்வையிட்டு தமது விடுமுறை காலத்தை கழிப்பார்கள்.
தாளையடி கடற்கரை
இதனில் வடக்கு மாகாணத்தில் தற்பொழுது கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கடற்கரை சூழலான தாளையடி கடற்கரையானது இயற்கை அழகுடன் அமைதியான தோற்றத்தில் பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தன் வசப்படுத்தி கொண்டுள்ளது.
இந்தநிலையில், கவலைக்குரிய விடயம் என்னவென்றால் தாளையடி கடற்கரையில் சுற்றுலா வாசிகள் தமது விடுமுறை காலங்களை கழிப்பதில் பல பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
கடற்கரையில் பொதுவான மலசலகூடம் இன்மை, மற்றும் தங்குவதற்கு விடுதிகள் இன்மை, பயணிகளை கவரும் வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் இன்மை போன்ற குறைபாடுகள் காணப்படுகின்றன.
சுற்றுலா பயணிகள் வருகை
இதேவேளை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா வாசிகள் போதைப் பொருட்களை கடற்கரையில் பாவித்தபின் அதன் போத்தல்கள் தகரங்களை அவ்விடத்தில் வீசுவதால் சூழலின் அழகு பாதிக்கப்படுவதுடன் சூழல் மாசும் ஏற்படுகிறது.
குறித்த இடத்தினை அபிவிருத்தி செய்து சுற்றுலா வாசிகளின் சுகாதாரம் சுதந்திரமான நடமாட்டத்திற்க்கும் தேவைகளுக்கும் ஏற்ற வகையில் மாற்றியமைத்தால் இன்னும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தர வழிவகுக்கும்.

பிரதியமைச்சர் அருண் கேமச்சந்திராவுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பாம்! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 21 மணி நேரம் முன்

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

சரியான சாப்பாடு இல்லாமல் கிழிந்த உடையுடன்.., மாணவர்கள் முன்பு கிரிக்கெட் வீரர் நடராஜன் எமோஷனல் News Lankasri

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam
