வெளிநாட்டில் தாய் - இலங்கையில் பரீட்சைக்காக தயாரான மாணவி பலி
காலி, எல்பிட்டிய பிரதேசத்தில் புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்நோக்க காத்திருந்த 5ஆம் வகுப்பு மாணவி ஒருவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அமுகொட சுதாரக ஆரம்ப பாடசாலையில் 5ஆம் வகுப்பில் கல்வி கற்று வந்த நெதுலி மதுஷிகா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
பரீட்சைக்கு முன்னரான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்த சிறுமி, தனது தந்தையின் முச்சக்கர வண்டியில் பாட்டி மற்றும் அத்தையுடன் அம்பலங்கொடவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
வீதி விபத்து
அங்கிருந்து மீண்டும் எல்பிட்டியவுக்கு திரும்பிய போது விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எல்பிட்டிய - பிட்டிகல வீதியில் முச்சக்கர வண்டியில் இருந்து தவறி விழுந்த நெதுலி, பலத்த காயங்களுக்கு உள்ளானார்.
உடனடியாக எல்பிட்டிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
சிறுமி மரணம்
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல், சிறுமி உயிரிழந்தார்.
8 மாதங்களுக்கு முன்னர் சிறுமியின் தாயார் வெளிநாடு சென்றிருந்தார். இந்த நிலையில் பாட்டியின் பராமரிப்பில் சிறுமி வசித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





இறுதிக்கட்டத்தை எட்டிய விஜய் டிவியின் தங்கமகள் சீரியல்.... கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோ இதோ Cineulagam

அறிவுக்கரசி கையில் வீடியோ.. குணசேகரனை மாட்டி விடுவாரா! - எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு ப்ரோமோ Cineulagam
