நுவரெலியாவில் சிக்கிக் கொண்டுள்ள சுற்றுலாப் பயணிகள்
தொழிற்சங்கங்கள் இன்று (15.03.2023) முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பினால் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இலங்கை வந்துள்ள பிரான்ஸ் மற்றும் ரஷ்ய பிரஜைகள் குழுவொன்று தங்கள் வழிகாட்டிகளுடன் கடந்த நுவரெலியாவுக்கு வருகை தந்துள்ளனர்.
பேருந்துகளில் நுவரெலியாவுக்கு வருகை தந்திருந்த அவர்கள் நுவரெலியா நகரைப் பார்வையிட்ட பின் இன்று நானுஓயாவில் இருந்து எல்ல வரை புகையிரதத்தில் பயணிக்க திட்டமிட்டிருந்துள்ளனர்.

தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு
தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு காரணமாக அவர்கள் தாங்கள் திட்டமிட்டிருந்தபடி பயணிக்க முடியாது அசௌகரியங்களுக்கு உள்ளாகி இருப்பதாக அறியக் கிடைத்துள்ளது.
தற்போது அவர்கள் நுவரெலியா நகரில் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதாக தொலைக்காட்சி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam