அன்றாட செயற்பாடுகளில் எவ்விதமான தடங்கல்களும் இல்லை : அரசாங்கம்
தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு காரணமாக அன்றாட செயற்பாடுகளில் எதுவிதமான தடங்கல்களும் இல்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (15.03.2023) பகிஷ்கரிப்பில் முன்னெடுத்துள்ளது.
இலங்கைத் துறைமுக அதிகார சபை, அரசாங்க மருத்துவமனைகள், பாடசாலைகள் என்பவற்றின் வழமையான செயற்பாடுகள் ஓரளவுக்குத் தடங்கலை எதிர்கொண்டுள்ளன. புத்தளம் மாவட்டத்தின் பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
அதே போன்று அரசாங்க வங்கிகளின் சேவைகளிலும் குறிப்பிடத்தக்கப் பாதிப்புகளைக் காணமுடிவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் தமது தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகத் தொழிற்சங்க பிரமுகர்கள் அறிவித்துள்ள போதிலும், அவ்வாறான நிலை ஏதும் அவதானிக்கப்படவில்லை என்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் வழமை போன்று நடைபெறுவதாகவும் அரசாங்க உயர்மட்டம் அறிவித்துள்ளது.