அரசாங்கம் எம்மைத் தடுக்க முடியாது – தொழிற்சங்கக் கூட்டமைப்பு வெளியிட்ட தகவல்

The Bank of Ceylon Ocean University of Sri Lanka Sri Lanka Government Strike Sri Lanka Water Board
By Rakesh Mar 15, 2023 09:42 AM GMT
Report

 ஆட்சியாளர்களின் வர்த்தமானி அறிவித்தல்கள் ஊடாக எமது பணிப்புறக்கணிப்பைத் தடுத்து நிறுத்திவிட முடியாது. திட்டமிட்ட வகையில் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கின்றோம் என 47 தொழிற்சங்கங்களின் கூட்டான, தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பில் உள்ள அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்தப் பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

அரசாங்கம் எம்மைத் தடுக்க முடியாது – தொழிற்சங்கக் கூட்டமைப்பு வெளியிட்ட தகவல் | Srilanka Government Workers Strike

போராட்டத்தின் கோரிக்கைகள்

முறையற்ற வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி திருத்தப்பட வேண்டும் என்பதே இந்தப் போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாகும்.

அத்துடன், வங்கி வட்டி வீதத்தைக் குறைத்தல், 25 ஆயிரம் ரூபாவுக்கு வாழ்க்கைச் செலவு நிவாரணத்தை வழங்குதல், மின்சாரக் கட்டணத்தை குறைத்தல், ஓய்வூதியக் குறைப்பை உடனடியாக நிறுத்துதல் உள்ளிட்டவையும் பிற கோரிக்கைகளாக உள்ளன.

ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிக வருமானம் பெறும் அனைவரிடமிருந்தும் 6 வீதம் முதல் 36 வீதம் வரை வரியை அறவிடுவதற்கு ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளமையால், தொழிற்சங்கத்தினர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.

போராட்டத்தின் பங்காளர்கள்

மேற்படி கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளும் தொழிற்சங்கக் கூட்டமைப்பில், அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மருத்துவ பீட விரிவுரையாளர்கள் , மின்சார பொறியியலாளர்கள், வங்கி சேவை ஊழியர்கள், பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், வீதி அபிவிருத்தி, கல்வி நிர்வாகம், நில அளவை திணைக்களம், வருமான வரி உள்ளிட்ட தரப்பினர் பங்காளர்களாக உள்ளனர்.

அரசாங்கம் எம்மைத் தடுக்க முடியாது – தொழிற்சங்கக் கூட்டமைப்பு வெளியிட்ட தகவல் | Srilanka Government Workers Strike

அத்துடன், அனைத்து பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர், தாதியர், சுகாதாரச் சேவை, தபால், அரச முகாமைத்துவ சேவைகள், சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் பணிப்பகிஷ்கரிப்புக்குப் பூரண ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளன.

பல்கலைக்கழக ஊடகப்பேச்சாளரின் கருத்து

இந்நிலையில் பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளரான மூத்த விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,

ஆட்சியாளர்களுடன் முன்னெடுத்த எந்த ஒரு பேச்சும் வெற்றி பெறவில்லை.

ஆகவே, திட்டமிட்டவாறு முன்னெடுக்கப்படுகின்ற பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் நாம் முழுமையாகப் பங்கேற்கின்றோம். அது நிச்சயமாக வெற்றிபெறும் என்றார்.

இலங்கை வங்கி பிரதான செயலாளரின் கருத்து

இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில்,

அரசாங்கம் எம்மைத் தடுக்க முடியாது – தொழிற்சங்கக் கூட்டமைப்பு வெளியிட்ட தகவல் | Srilanka Government Workers Strike

எமது போராட்டம் மட்டுப்படுத்தப்படப் போவதில்லை. அது தொடர்ந்து முன்னெடுக்கப்படப் போகின்றது. இதனால் நாட்டின் நிலைமைகள் மேலும் மோசம் அடையும். ஆட்சியாளர்கள் அது பற்றிக் கரிசனை கொள்ளவேண்டும்.

அவ்வாறில்லாத ஆட்சியாளர்கள் பொறுப்பற்று இருப்பார்களானால் அவர்கள் முகங்கொடுக்க வேண்டிய பல பிரச்சினைகள் அடுத்து வரும் நாட்களில் அதிகரிக்கும் அபாயம் நிலைமைகளை உள்ளன என்றார்.

மருத்துவ சங்கத்தின் வெளிப்பாடு

விசேட வைத்திய விரிவுரையாளர் சங்கத்தின் உறுப்பினர் பேராசிரியர் இந்திக்க கருணாதிலக்க கருத்துத் தெரிவிக்கையில்,

சிறந்த, தீர்வொன்று ஆட்சியாளர்களால் வழங்கப்படும் என்று நாம் எதிர்பார்த்தோம். ஆனால், அதற்கு எவ்விதமான முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. ஆகவே, போராட்டத்திற்கு எமது சங்கம் ஆதரவை வெளியிடுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது என்றார்.

நீர்வழங்கள் அமைப்புச்சபையின் வெளிப்பாடு

நாட்டின் தேசிய நீர் வழங்கள் வடிகால் அமைப்பு சபையின் வரி செலுத்துவோரின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாடாளர் மஞ்சுளா பெரேரா கருத்துத் தெரிவிக்கையில்,

அரசாங்கம் எம்மைத் தடுக்க முடியாது – தொழிற்சங்கக் கூட்டமைப்பு வெளியிட்ட தகவல் | Srilanka Government Workers Strike

தொழிற்சங்கத்தின் நியாயமான போராட்டச் செயற்பாடுகளில் நாம் ஈடுபடுகின்றோம். அதனடிப்படையில் நாம் சகல அரச கருமச் செயற்பாடுகளிலிருந்தும் விலகி நிற்கின்றோம்.இதனால் நாட்டின் சில இடங்களில் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்படும் என்றார்.

மருத்துவ சங்கத்தின் கருத்து

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமல் விஜயசிறி கருத்துத் தெரிவிக்கையில்,

ஆட்சியாளர்களுடனான பேச்சு தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில் திட்டமிட்டபடி போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அதற்கு எமது சங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்குகின்றது.

அதேநேரத்தில் அத்தியாவசிய அவசர சிகிச்சைகளை முன்னெடுப்பதற்கு வைத்தியர்கள் நிச்சயமாக ஒத்துழைப்புகளை வழங்குவார்கள். அந்தவகையில் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்பைத் தொடர்ந்தும் முன்னெடுப்போம் என்றார்.

மின்சார சபையின் கருத்து

இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் கருத்துத் தெரிவிக்கையில்,

அரசாங்கம் எம்மைத் தடுக்க முடியாது – தொழிற்சங்கக் கூட்டமைப்பு வெளியிட்ட தகவல் | Srilanka Government Workers Strike

மின்சார சபை தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டால் நிச்சயமாக நாட்டின் ஒட்டுமொத்த மின்சாரமும் முடங்கும் அபாயமே காணப்படுகின்றது.

அவ்வாறு இருக்கின்ற போது நியாயமான கோரிக்கைகளை ஆட்சியாளர்கள் உடனடியாகத் தீர்த்து தரவேண்டும் என்பதே நமது வலியுறுத்தலாக உள்ளது என்றார்.

ஆசிரியர் சங்கத்தின் வெளிப்பாடு

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்துத் தெரிவிக்கையில்,

அரசாங்கம் எம்மைத் தடுக்க முடியாது – தொழிற்சங்கக் கூட்டமைப்பு வெளியிட்ட தகவல் | Srilanka Government Workers Strike

ஆட்சியாளர்கள் மக்கள் பக்கம் நின்று சிந்திக்காது தனது இருப்பை மையப்படுத்தியே சிந்திக்கிறது.

இதனால் சாதாரண மக்களின் நிலைமைகள் மிகவும் மோசமடைந்துள்ளன. இந்நிலையில் தான் இந்தப் போராட்டத்தில் அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பங்கேற்று எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றோம் என்றார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US