விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த சுற்றுலா பயணி!
ஹட்டன் கொட்டகலை பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த உள்நாட்டு சுற்றுலா பயணியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து கொட்டகலைக்கு வருகை தந்த 60 வயதுடைய ரியென்சி பிள்ளை என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தனது நண்பருடன் நேற்று(05.09.2025) சுற்றுலா விடுதிக்கு வந்து மது அருந்தி விட்டு விடுதியின் தரையில் விழுந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இதனையடுத்து, அவர் மீண்டும் தனது அறைக்கு சென்றுள்ளார். இவை அனைத்தும் விடுதியின் பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து, இன்று அதிகாலை அவர் விடுதி அறைக்குள் இறந்து கிடந்ததை ஊழியர் ஒருவர் கண்டுபிடித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை திம்புல பத்தனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam
கோமதிக்கு மீண்டும் உடைந்த அம்மா வீட்டின் உறவு, ஷாக்கில் பாண்டியன் செய்த விஷயம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
சீனாவா அமெரிக்காவா என தெரிவு செய்ய வேண்டிய அவசியம் பிரித்தானியாவிற்கு இல்லை- ஸ்டார்மர் News Lankasri
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam