பேருந்து சாரதியின் கவனயீனத்தால் நேர்ந்த விபரீதம்: 8 பேர் காயம் (Video)
நுவரெலியா- கண்டி பிரதான வீதியில் ஹெல்பொட கட்டுக்கித்துல பகுதியில் தனியார் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
புத்தளம் பகுதியிலிருந்து நுவரெலியா நகரை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றே இன்றையதினம் (10.07.2023) விபத்திற்குள்ளாகியுள்ளது.
புத்தளத்திலிருந்து சுமார் 22 சுற்றுலா பயணிகளுடன் சென்ற இந்த பேருந்தில் 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக கட்டுப்பாட்டை இழந்ததனால் இந்த விபத்து நேர்ந்ததாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
உயிர் சேதம் இல்லை
இவ்விபத்தில் காயமடைந்த 08 பேரில், கொத்மலை வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சைக்காக 4 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் நால்வர் புஸ்ஸலாவ வகுக்கப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ்விபத்து தொடர்பில் புஸ்ஸலாவ போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.


பாக்ஸ் ஆபிஸ்: தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஜெயிலர் 2.. 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் Cineulagam
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri
வெளிநாட்டில் இருக்கேன், சொல்லாம போறீங்களே அப்பா.. செஃப் தாமு மறைவால் கண்ணீர் விட்டு கதறும் புகழ் Cineulagam