இருபதுக்கு 20 உலககோப்பை தொடர்களில் சாதனை படைத்த பந்துவீச்சாளர்கள்
இருபதுக்கு 20 உலககோப்பையின் (T20 World Cup) 9ஆவது தொடர் ஜூன் 1 முதல் ஜூன் 29ஆம் திகதி வரை மேற்கிந்திய தீவுகள் (West Indies) மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் (United States of America) ஆரம்பமாகவுள்ளது.
இதுவரை, இருபதுக்கு 20 உலககோப்பையில் பல்வேறு பந்துவீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயற்பட்டுள்ளனர்.
அதற்கமைய, ஒரு தொடரில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளராக வனிந்து ஹசரங்க (Wanindu Hasarange) உள்ளார்.
இவர் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணத் தொடரில் 16 விக்கெட்டுக்களை கைப்பற்றி இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
ரவிச்சந்திரன் அஸ்வின்
டி20 உலகக்கிண்ணங்களில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளராக ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichanran Ashwin) உள்ளார்.
இவர் இதுவரை 32 விக்கெட்டுக்களை டி20 உலககிண்ணங்களில் கைப்பற்றியுள்ள போதிலும், இந்த முறை நடைபெறவுள்ள தொடருக்கான இந்திய குழாமில் இடம்பெறவில்லை.
அதிக விக்கெட்டுக்கள்
நடைபெற்று முடிந்த இருபதுக்கு 20 உலககோப்பை தொடர்களில் பங்ளாதேஸின் சகலத்துறை வீரர் ஷகிப் அல் ஹஸன் (Shakib Al Hassan) 47 விக்கெட்டுக்களை கைப்பற்றி இந்த தொடர்களில் அதிக விக்கெட்டுக்களை எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இரண்டாவதாக, இந்த பட்டியலில் 34 போட்டிகளில் விளையாடி 39 விக்கெட்டுக்களை கைப்பற்றிய பாகிஸ்தானின் முன்னாள் சகலத்துறை வீரர் ஷஹித் அஃப்ரிடி (Sahid Afridi) உள்ளார்.
அதற்கு அடுத்த இடத்தை இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க (Lasith Malinga) பெற்றுள்ளார்.
இவர் 31 போட்டிகளில் விளையாடி 38 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களை முறையே பாகிஸ்தானின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷஹீத் அஜ்மல் (Shaheed Ajmal) மற்றும் இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸ் (Ajantha Mendis) பிடித்துள்ளனர்.
ஷஹீத் அஜ்மல் 36 விக்கெட்டுக்களையும் அஜந்த மெண்டிஸ் வெறுமனே 21 போட்டிகளில் விளையாடி 35 விக்கெட்டுக்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |