எல்.பி.எல் குறித்த போலி செய்திகள்: அமைச்சர் ஹரின் எச்சரிக்கை
லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடர்பில் சமூக ஊடக தளங்களில் பல்வேறு வதந்திகளை பரப்புபவர்களுக்கு எதிராக நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார்.
2024 எல்பிஎல் போட்டியின் வீரர்கள் ஏலத்திற்கு மறுநாள் தம்புள்ளை தண்டர்ஸ் (Dambulla Thunders’) உரிமையாளரை கைது செய்தமை தொடர்பாக வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுகள்
பந்தயம் மற்றும் ஆட்ட நிர்ணயத்திற்கு எதிரான விளையாட்டுச் சட்டம் தாம் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த காலத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது என்பதை நினைவுபடுத்திய ஹரின் பெர்னாண்டோ, கிரிக்கெட் வீரர்களின் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு இந்த சட்டம் வழிவகை செய்துள்ளது.
இவ்வாறான சம்பவங்களை விசாரிப்பதற்காக விசேட புலனாய்வுப் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதோடு அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களை கைது செய்து விளக்கமறியலில் வைக்க சட்டத்தின் கீழ் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டிற்கு விளையாட்டு தொடர்பான சட்டத்தை கொண்டு வந்துள்ளேன். யாரேனும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் சட்டத்தின் கீழ் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள்.
தெற்காசிய நாடுகளில் இவ்வாறான சட்டத்தை கொண்டுள்ள ஒரே நாடு இலங்கை. ஆனால் உண்மைகள் தெரியாமல் மக்கள் எனக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யாவுக்கும் (Sanath Jayasuriya) எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
கடந்த ஐந்து வருடங்களாக எல்பிஎல் போட்டி நடத்தப்பட்டதாகவும், தேர்தலுக்கும் போட்டிகளுக்குமான தொடர்புதான் என்ன என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |