இறுதிப்போட்டியில் அபார வெற்றி : ஐ.பி.எல் கோப்பையை தட்டிச்சென்ற கொல்கத்தா
2024 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பாட்டம் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து. 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.
And at that moment, we knew we were the CHAMPIONS! ?pic.twitter.com/0WZbfzbSUc
— KolkataKnightRiders (@KKRiders) May 26, 2024
ஐந்தாவது இந்திய அணி தலைவர்
இதனையடுத்து அடுத்த துடுப்பாட்டம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 114 ரன்கள் என்ற வெற்றி இலக்கை 10.3 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெற்று வெற்றியை பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் கோப்பை வென்ற இந்திய அணித்தலைவர்களின் வரிசையில் ஐந்தாவது இந்திய அணி தலைவர் என்ற இடத்தை பிடித்துள்ளார்.
கொல்கத்தா அணி இதுவரையில் இரண்டு ஐ.பி.எல் கோப்பைகளை வென்றிருந்த நிலையில் இந்த வெற்றியுடன் தற்போது மூன்று கோப்பைகளை சுவிகரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |