எல்.பி.எல் மோசடிகளுக்கும் இலங்கை கிரிக்கெட் சபைக்கும் தொடர்பில்லை : குற்றச்சாட்டு நிராகரிப்பு
லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரில் இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகள் மோசடிகளில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹேவா விதானகே இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர், லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரின் பணிப்பாளர் மற்றும் ஏனைய கிரிக்கட் நிர்வாக அதிகாரிகள் மோசடிகளில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அதிகாரிகள் ஆட்ட நிர்ண சதிகளுடன் தொடர்புபட்டிருப்பதாகவும், மோசடிகளுடன் தொடர்பு பட்டிருப்பதாகவும் ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.
எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகம் அறிவித்துள்ளது.
விளையாட்டின் நேர்மைத்தன்மை
கடந்த 2020ம் ஆண்டு லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடர் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரையில் இலங்கை கிரிக்கெட் சபை மிகவும் நேர்மையான முறையில் போட்டித் தொடரை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் விளையாட்டின் நேர்மைத்தன்மையை உறுதி செய்வதற்கு எடுத்து வரும் முயற்சிகளின் காரணமாகவே மோசடிகள் குறித்த விசாரணைகள் நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
தம்புள்ள அணி தொடர்பான எழுந்த சர்ச்சைகளின் போதும் இலங்கை கிரிக்கெட் சபை விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளாக சுட்டிக்காட்டியுள்ளது.
கிரிக்கெட் விளையாட்டின் நேர்மைத்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |