இடியுடன் கூடிய கனமழை: வடக்கு கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Jaffna Sri Lankan Peoples TN Weather Weather Floods In Sri Lanka
By Thulsi Jan 09, 2024 08:28 AM GMT
Report

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் (09) நாளையும் (10) மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு, ஊவா ,மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் பொலநறுவை மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என்றும் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் சூழ்ந்து காணப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

இலங்கையின் வடக்கில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வாய்ப்புகள்

இலங்கையின் வடக்கில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வாய்ப்புகள்

இடியுடன் கூடிய மழை

காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, பொத்துவில், ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய கனமழை: வடக்கு கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Today Weather Forecast In Srilanka

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இதேவேளை, 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்கு அல்லது கிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.  

செங்கடலில் நிலைகொள்ளவுள்ள இலங்கை கடற்படை

செங்கடலில் நிலைகொள்ளவுள்ள இலங்கை கடற்படை

பலத்த காற்றும் மின்னல் 

நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய கனமழை: வடக்கு கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Today Weather Forecast In Srilanka

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என தெரிவித்துள்ளார்.

வாகனங்களை லீசிங் செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையாகும் கட்டுப்பாடு

வாகனங்களை லீசிங் செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையாகும் கட்டுப்பாடு

இறுதிச் சுற்று மழை 

மேலும், இலங்கைக்கு கீழாக நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 11.01.2024 வரை தொடரும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

“குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் நாளை வரை மிகக் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

ஏற்கனவே பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்க தொடங்கியுள்ளதால் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள ஆபத்து தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம்.

2023/2024 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வடகீழ் பருவத்தின் இறுதிச் சுற்று மழை இதனோடு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் ஜனவரி இறுதிவரை அவ்வப்போது மிதமான மழை கிடைக்க கூடும். தற்போதைய மழை குறைவடைந்ததும் பனி தொடங்கும் என்பதனால் சற்று குளிரான வானிலை தொடரக்கூடும்” என்றார்.

செய்தி - கஜி

9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US