கனமழை பெய்யக்கூடும்! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
நாட்டில் இன்று பல இடங்களில் சுமார் 100 மி.மீ வரையில் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமத்திய, மத்திய, சபரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் சுமார் 100 மி.மீ வரையில் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களிலும் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.