கோட்டாபய ராஜபக்ச சிக்கப்போகும் மையப்புள்ளி! மிக் தொடர்பில் மறைக்கப்பட்ட பல தகவல்கள் கசிவு...
சர்ச்சைக்குரிய மிக் (MiG) விமானக் கொள்னவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் நடந்து வரும் நிலையில்,முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) வௌ்ளிக்கிழமை (11.09.2026) முன்னிலையாகி வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் மிக் கொள்வனவு தொடர்பில் பல மறைக்கப்பட்ட தகவல்கள் கசிந்துள்ளன.
பாவித்த 4 மிக்-27 தாக்குதல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கும், அந்த நேரத்தில் இலங்கை விமானப்படையிடம் இருந்த 3 மிக்-27 போர் விமானங்கள் மற்றும் விமானிகளைப் பயிற்றுவிக்கும் 1 மிக்-23 விமானம் ஆகியவற்றை பழுதுபார்ப்பதற்கும் 2006 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் திகதி இலங்கை விமானப்படை ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது .
கோட்டாபயவை தனிமையில் சந்தித்த ரிஷாட்! பதில் கூற மறுத்த முன்னாள் ஜனாதிபதி - காலம் கடந்து வெளிவரும் விடயம்
இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தம்
இது இரண்டு நாடுகளுக்கு இடையே நேரடியாக நடந்த ஒரு கொடுக்கல்வாங்கல் (G2G) போலக் காட்டப்பட்டது. உக்ரைன் அரசுக்கு சொந்தமான "உக்ரின்மாஷ்" (Ukrinmash) என்ற அரசு ஏற்றுமதி நிறுவனத்துடன் நேரடியாக நடைபெற்ற கொடுக்கல்வாங்கல் என்றே கூறப்பட்டது.
மேலும், இதை இரண்டு நாடுகளுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கலாகக் காட்டவே பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால்,இந்த கொடுக்கல் வாங்கல் இரண்டு நாடுகளுக்கு இடையே நடந்த ஒன்று அல்ல என்பது பின்னர் தெரியவந்தது. கொடுப்பனவுகளும் உக்ரைன் அரசு நிறுவனமான "உக்ரின்மாஷ்" நிறுவனத்திற்குச் செய்யப்படவில்லை; மாறாக "பெல்லிமிஸா ஹோல்டிங்ஸ்" (Bellimissa Holdings) என்ற தனியார் நிறுவனத்திற்கே செலுத்தப்பட்டிருந்தது.

கொள்முதல் செய்தல் மற்றும் பழுதுபார்த்தல் தொடர்பாக நியாயமற்ற விலைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. முழுமையான கொள்முதல் மற்றும் பழுதுபார்ப்பிற்காக இலங்கை செலுத்திய மொத்தத் தொகை 14.67 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.
விசாரணைகளில் இது 15.66 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரியவந்தது. 4 மிக் விமானங்கள், ஒரு விமானம் 2.462 மில்லியன் டொலர்கள் என்ற விலையில் வாங்கப்பட்டுள்ளன.
2006 இல் இந்த 4 விமானங்கள் வாங்கப்பட்ட அதே கையிருப்பிலிருந்தே (Stock), 2000 ஆம் ஆண்டு மே 25 மற்றும் அக்டோபர் 24 ஆகிய திகதிகளில் பயன்படுத்தப்பட்ட 6 மிக் விமானங்களும், மேலே குறிப்பிடப்பட்ட பயிற்சி விமானமும் வாங்கப்பட்டன.
2000 ஆம் ஆண்டில் இந்த விமானங்களை வாங்கும் போது அதன் விலை: மே 25 இல் வாங்கும் போது 1.75 மில்லியன் அமெரிக்க டொலர்கள், அக்டோபர் 24 இல் வாங்கும் போது 1.6 மில்லியன் டொலர்கள். மே 25 இல் 4 விமானங்களும், அக்டோபர் 24 இல் 2 விமானங்களும் வாங்கப்பட்டன.
விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்
ஆனால், 2000 ஆம் ஆண்டில் விமானங்கள் வாங்கப்பட்ட போது இருந்த அதே கையிருப்பில் எஞ்சியிருந்த 4 விமானங்கள் தான் 2006 ஆம் ஆண்டில் வாங்கப்படுகின்றன.
அப்படியென்றால், 2000 ஆம் ஆண்டில் வாங்கப்படாமல் 6 ஆண்டுகள் பழமையான இந்த 4 மிக் போர் விமானங்களும், 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு விமானம் 2.462 மில்லியன் டொலர்கள் என இரட்டிப்பு விலைக்கு வாங்கப்பட்டுள்ளன.
இது எப்படி நடந்தது? 2000 ஆம் ஆண்டில் 6 விமானங்களை வாங்கச் சென்ற போது, விமானங்களைத் தேர்வு செய்யும் தரப் பரிசோதனைகளில் இந்த 4 விமானங்களும் நிராகரிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த 4 விமானங்கள் தான், 2006 ஆம் ஆண்டில் அதிக விலை கொடுத்து இங்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதுவும் தற்போது வெளிடைவாகியுள்ளது.
விமானிகளைப் பயிற்றுவிக்கும் மிக்-23 என்ற விமானம் 2000 ஆம் ஆண்டில் 900,000 அமெரிக்க டொலர்களுக்கு (9 லட்சம் டொலர்) வாங்கப்பட்டது.
ஆனால், புதிய ஒப்பந்தத்தின் பின்னர் இந்த விமானத்தைப் பழுதுபார்க்க செலவிடப்பட்ட தொகை 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள். விமானத்தை வாங்கியது 0.9 மில்லியன் டொலருக்கு, ஆனால் அதை பழுதுபார்க்க 1.1 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
ஒரு புதிய விமானத்தை வாங்குவதை விட, பழைய விமானத்தைப் பழுதுபார்க்க அதிக பணம் செலவிடப்பட்டுள்ளது.இவ்வாறான பல தகவல்கள் இன்னும் வெளிவரவுள்ளன.