நடுவானில் பரபரப்பு! லண்டன் நோக்கிப் பறந்த விமானத்திற்கு நேர்ந்த ஆபத்து - கட்டுநாயக்கவில் அவசரத் தரையிறக்கம்
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (28) பிற்பகல் லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-503 என்ற Airbus A330 ரக விமானம், பறவை மோதியதைத் தொடர்ந்து மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானம் இன்று பிற்பகல் 12.55 மணியளவில் லண்டன் நோக்கிப் புறப்பட்டதாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் நிறுவனத் தொடர்பாடல் பிரிவு பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட விமானம்
விமானத்தில் 269 பயணிகளும் 15 பணியாளர்களும் இருந்துள்ளனர்.
விமானம் புறப்பட்டுச் சிறிது நேரத்திலேயே பறவை மோதியதைத் தொடர்ந்து, விமானி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விமானத்தைப் பாதுகாப்பாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளார்.

இதனையடுத்து, விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதுடன், அவர்களுக்குத் தேவையான உபசரிப்புகளை வழங்கவும் ஸ்ரீலங்கன் விமான சேவை நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், பயணிகளை வேறொரு விமானம் மூலம் இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கிடையில், பறவை மோதியதால் பாதிக்கப்பட்ட விமானம் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.
பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam