தள்ளாடிய நிலையில் அனுராதபுர பேரணியில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த
புதிய இணைப்பு
கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அனுராதபுரத்தில் நடைபெறும் ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் பேரணிக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது வருகை தந்துள்ளார்.
முதலாம் இணைப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்திற்கு எதிரான பேரணி அனுராதபுரத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் இடம்பெறவிருந்த குறித்த பேரணியானது, அவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரின் தந்தை தலைமை தாங்குவார் என அக்கட்சி தெரிவித்திருந்தது.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று குறித்த பேரணியில் கலந்து கொள்வார் என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீ்ண்டும் அரசியல் களத்தில் இறங்கும் மகிந்த என்னும் பாணியில் தென்னிலங்கை அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.