நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பதுளை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கடும் வாகன நெரிசல்
குறித்த பகுதியில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக, வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
எனவே இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |