தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த பிரம்டன்!
கனடா- பிரம்டன் நகரசபை தமிழீழத் தேசியக் கொடியை அங்கீகரித்துள்ளது.
பிரம்டன் நகரில் ஏற்கனவே முள்ளிவாய்க்கால் முற்றம் போன்ற தாயக சார்ப்பு நகர்வுகள் இடம்பெற்ற நிலையில் இந்த புதிய முன்னெடுப்பு வந்துள்ளது.
இந்த அங்கீகாரத்தின் அடிப்படையில் நாளை நவம்பர் 21 ஆம் திகதி காலை 9.30 க்கு பிரெம்ரன் நகரமுதல்வர் பற்றிக் பிறவுண் (Patrick Brown) தலைமையில் கென் வலன்ஸ் சதுக்கத்தில் (Ken Whillans Square) உள்ள கொடிக்கம்ப முற்றத்தில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்படும் என பிரம்டன் நகர சபை அறிவித்துள்ளது.
தமிழீழத் தேசியக் கொடி
முன்னதாக தமிழீழத் தேசியக் கொடி நாளை அங்கீகரித்து பிரம்டன் நகர சபை சுற்றுநிருபம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

தமது விடாமுயற்சி மற்றும் முன்னகர்வுகளால் தமிழீழத் தேசியக் கொடி நாளுக்குரிய இந்த அங்கீகாரம் கிட்டியதாக உலகத் தமிழர் உரிமைக் குரல் என்ற கனேடிய புலம்பெயர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.



