யாழில் இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்ட பகுதி
யாழ்.(Jaffna) சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது யாழ். மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் (13.05.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்ட வீடானது ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்யும் கூடமாக செயற்பட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுற்றிவளைப்பு நடவடிக்கை
இந்நிலையில், ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டதுடன் வீடானது சீல் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பில் இருந்து இரசாயன பகுப்பாய்வாளர்களை வரவழைத்து பகுப்பாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
@tamilwinnews யாழில் போதைப்பொருட்களை உற்பத்தி செய்யும் நிலையம் முற்றுகை #Lankasrinews #Srilanka #Jaffna #tamilwinnews ♬ original sound - தமிழ்வின் செய்திகள்
மேலும் கைது நடவடிக்கையின் போது பிரதான சந்தேக நபர் தப்பியுள்ள நிலையில் அங்கு பணிபுரியும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் இருவரும் யாழ். பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக தகவல் - கஜிந்தன்
You may like this...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri
