யாழில் காணி பிரச்சினையில் ஒருவர் அடித்துக்கொலை: மூவர் தலைமறைவு
யாழ்ப்பாணம் - கோப்பாய் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பிரச்சினையில் ஒருவர் அடித்துக் கொலைச் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று(16.02.2026) பிற்பகல் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
உயிரிழப்பு
இவ்வாறு உயிரிழந்தவர் கோப்பாய் ஆசிரிய கலாசாலை வீதியில் வசிக்கும் 59 வயதான செல்லத்துரை செல்வரஞ்சன் என்பவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துப் பாதை தொடர்பாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம், பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மேற்படி நபர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் தாக்குதலாளிகள் மூவரையும் அடையாளம் கொண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை சடலத்தை மீட்டு, உடற்கூற்று பரிசோதனைக்கு யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலதிக தகவல் - ராகேஷ்
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam