பிரித்தானியாவில் விலையுயர்ந்த ஹோட்டலை கொள்வனவு செய்த இலங்கை நிறுவனம்
பிரித்தானியாவின் டெர்பியில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்று இலங்கை நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
செயின்ட் மேரிஸ் கேட்டில் உள்ள தரம் வாய்ந்த இந்த ஹோட்டலை, டெடிகம குழுமத்தின்; ரஸ்மி டெடிகம மற்றும் பீட்டர் கரன் ஆகியோர் வெளியிடப்படாத தொகைக்கு கொள்வனவு செய்துள்ளனர்.
2010 ஆம் ஆண்டு மறைந்த மகாராணி இரண்டாவது எலிசபெத் இந்த ஹோட்டலில் உணவருந்தியபோது அதன் தலைமை சமையல்காரருக்கு தமது தனிப்பட்ட நன்றியை தெரிவித்திருந்தார்.

இந்த ஹோட்டலில் 38 தனித்தனியாக வடிவமைக்கப்பட்ட படுக்கையறைகள் உள்ளன. இது ஒரு விக்டோரியன் சொத்து ஆகும், இது முன்பு ஒரு பொலிஸ் நிலையமாகவும், நகரசபை தலைமையகமாகவும் செயற்பட்டது.
2008 ஆம் ஆண்டில், முந்தைய உரிமையாளர்களான தி ஃபைனெஸ் கலெக்சன், இந்த கட்டிடத்தை கொள்வனவு செய்து ஹோட்டலாக மாற்றியது.

இலங்கையைத் தளமாகக் கொண்ட தாய் நிறுவனத்துடன் 2005 ஆம் ஆண்டு முதல் எட்டு ஹோட்டல்களைக் கொள்வனவு செய்துள்ள Lavendish Leisure நிறுவனத்தால் கொள்வனவு செய்யப்பட்ட இரண்டாவது பிரித்தானிய ஹோட்டல் இதுவாகும்.
டெடிகம குழுமம் நிதிச் சேவைகள், நகைகள், இரத்தினக்கல் மற்றும் ஆபரண ஏற்றுமதி, ரியல் எஸ்டேட் மற்றும் தோட்டங்கள் ஆகியவற்றிலும் நிபுணத்துவம் பெற்றுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri