எதிர்கட்சியினருக்கு தடை செய்யப்பட வேண்டிய சொல்..!
எதிர்கட்சியினர், வளர்ச்சி என்ற வார்த்தையை பற்றி பேசுவதைத் தடை செய்ய வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்ம குமார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் இன்று (20.11.2025) பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நாம் செய்யும் செயல்களே நம்மை பின்தொடரும் என தர்மம் கூறுகின்றது. எனவே, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு 76 ஆண்டு கால சாபத்தை எப்படி நினைவுபடுத்தாமல் இருக்க முடியும்? அவர்கள் நாட்டிற்குச் செய்த அழிவை நிறுத்த வேண்டும்.
மாகாண சபைத் தேர்தல்
நாம் தொடர்ந்து 76 பற்றிப் பேச வேண்டும். தேர்தல் என்பது உங்களுக்கு விளையாட்டாக மாறிவிட்டது. மாகாண சபைத் தேர்தல்கள் விரைவில் வருகின்றன.

அதற்கு ஒரு சரியான சட்டத்தை உருவாக்குவோம். மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாத நிலையை ஏற்படுத்தியது நீங்கள் தான்” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |