யாழில் 27 வயதுடைய இளைஞன் கைது!
யாழ்ப்பாணம்- ஐந்து சந்தி பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(10.1.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில், 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
ஐந்து சந்தி பகுதியை அண்மித்த பகுதியில் பாடசாலை மாணவர்கள் , இளைஞர்களுக்கு போதை மாத்திரை விற்பனையில் இளைஞன் ஒருவர் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாண பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இளைஞனின் உடைமையில் இருந்து 3 ஆயிரம் போதை மாத்திரைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அவற்றின் பெறுமதி சுமார் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணை
கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் , குறித்த நபரிடம் இருந்து போதை மாத்திரைகளை கொள்வனவு செய்த நபர்கள் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
உலகக்கிண்ணத்தில் விளையாட மறுக்கும் வங்காளதேசம்.,இணைந்த பாகிஸ்தான்? இலங்கைக்கு மாற்ற கூறும் வீரர் News Lankasri
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam