முல்லைத்தீவு- வட்டுவாகல் பாலத்தின் தற்போதைய நிலை
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு A35 வட்டுவாகல் பாலம் ஊடான வீதி போக்குவரத்து வழமை போன்று சுமூகமான முறையில் இடம்பெற்று வருகின்றது.
தற்போது நாடெங்கிலும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்திலும் நேற்றையதினம்(9.1.2026) தொடக்கம் தொடர்ச்சியான முறையில் மழை பெய்து வருகின்றது.
இதனால் குளம், கடலின் நீர்மட்டமானது வழமையை விட உயர்வடைந்து காணப்படுகின்றது.
அவதானம்
இந்நிலையில் தொடர்ச்சியான மழை கிடைப்பதனால் வட்டுவாகல் பாலத்தின் நீர்மட்டம் வழமையை விட சற்று உயர்வடைந்துள்ளது.
எனினும் குறித்த பாலத்தினுடான போக்குவரத்து வழமை போன்று இடம்பெற்று வருகின்றது.

குறித்த பாலம் திருத்த வேலைகள் இடம்பெற்று வருவதனால் பாலத்தினூடாக பயணம் செய்பவர்கள் சற்று அவதானத்துடன் பயணம் செய்வது சிறந்ததாகும்.
கடந்த டித்வா புயல் மற்றும் கனமழையால் நீர்மட்டமானது உயர்வடைந்தமையால் பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து தற்காலிக புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்தது.



