கொழும்பில் திடீரென களமிறங்கும் மகிந்த! பின்னணியில் செயற்படும் மூன்றாம் தரப்பு சக்தி
கொழும்பில் நாளை நடைபெறவுள்ள அரச எதிர்ப்பு போராட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என புலனாய்வுத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது அதிருப்தி அடைந்த நிலையில், மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த போராட்டத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ளது.
இந்த போராட்டத்திற்கு இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடுவார்கள் என போராட்டத்தினை ஏற்பாடு செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரச புலனாய்வுத் தகவல்கள்
எனினும் குறித்த போராட்டத்திற்கு சில ஆயிரக்கணக்கானவர்களே கலந்து கொள்வார்கள் என அரச புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறான எண்ணிக்கையில் மக்கள் ஒன்றுகூடினால் இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் போராட்டம் தோல்வி அடைந்ததாகவே அமைந்து விடும். அநுர அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளமை வெளிப்படுத்தப்படும்.
இதன்மூலம் ஆட்சியை கைப்பற்ற முனைப்பிலுள்ள ராஜபக்சர்களுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என சுட்டிக்காட்டப்படுகிறது.
இதனை காரணமாக கொண்டே இந்த போராட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ள தீர்மானம் எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மகிந்தவின் திடீர் முடிவு
நுகேகொடையில் நடைபெறும் போராட்டத்தின் போது தான் கலந்து கொள்ளப் போவதில்லை என மகிந்த பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

எனினும் அண்மையில் தங்காலையில் இந்திய தூதரக அதிகாரி ஒருவரை சந்தித்த பின்னர், மகிந்த தனது முடிவை மாற்றியமைத்துள்ளார்.
அயல்நாட்டின் ஆலோசனைக்கு அமைய மகிந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இதன் காரணமாக மகிந்த மீதான விசுவாசம் கொண்ட மக்கள் நாளைய அரச எதிர்ப்பு பேரணியில் ஒன்று கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஒரு வருட காலமாக சுமுகமாக செல்லும் நாட்டில் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்தி, அதனை சீர்குலைக்க மூன்றாம் தரப்பு சக்திகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
எனினும் நாளையதினம் மக்கள் கூடும் எண்ணிக்கையை கொண்டு, சமகால அரசாங்கத்தின் ஒருவருட ஆட்சியின் வெளிப்பாடு புலம்படும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
சேரன் காதலியிடம் தவறாக நடந்துகொள்ள நினைத்த ரவுடிகள்.. அதிர்ச்சியளிக்கும் அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam