இலங்கையின் அதிகாரப்பூர்வ இருப்பு சொத்துக்களில் உயர்வு போக்கு: மத்திய வங்கி தகவல்
இலங்கையின் அதிகாரப்பூர்வ இருப்பு சொத்துக்கள், 2025 டிசம்பரில் 6.825 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
2025 நவம்பரில் இருந்த 6.034 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடும்போது, இது உயர்வு நிலை என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
மொத்த அதிகாரப்பூர்வ நாணய இருப்பு
இதற்கிடையில், டிசம்பர் மாத இறுதி பகுதியில் மொத்த வெளிநாட்டு நாணய இருப்பு 6.734 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் 2025 நவம்பர் மாத இறுதியில் மொத்த அதிகாரப்பூர்வ நாணய இருப்பு 5.944 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது என்றும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இதில் சீன மக்கள் வங்கி (PBOC) இடமாற்று ஏற்பாட்டிலிருந்து பெறப்பட்ட தோராயமாக 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான வருமானமும் அடங்கும், இந்த நிதி பயன்பாட்டிற்கான நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri