பன்னிப்பிட்டியவில் கோர விபத்து: ஒருவர் பலி! மேலும் மூவர் கவலைக்கிடம்
ஹைலெவல் வீதி, பன்னிபிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த விபத்து இன்று (24) காலை பன்னிபிட்டிய பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து திடீரென கவனக்குறைவாக வீதிக்குள் நுழைய முயன்ற முச்சக்கர வண்டி ஒன்றை மோதாமல் தவிர்க்க முயன்ற பேருந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், ஏனைய இருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்.. சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம் News Lankasri
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan