ஐரோப்பாவில் கோர விபத்தில் பலியான இலங்கையர்
இத்தாலியின் பெசாரோவில் நடந்த வீதி விபத்தில் இலங்கையர் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இலங்கையை சேர்ந்த 48 வயதான அஞ்சு ஜெயசிங்க எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 16 ஆம் திகதி அதிகாலை 5.20 மணியளவில், தனது பணியிடத்திற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது.
சாரதி கைது
விபத்தை ஏற்படுத்திய வாகனம் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற நிலையில், பின்னர் சாரதி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அதே வழியில் பயணித்த குப்பை அகற்கும் தொழிலாளர்கள் குழு, இலங்கையர் காயங்களுடன் வீதியோரத்தில் கிடப்பதைக் கண்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இலங்கையர் சுமார் 15 ஆண்டுகளாக இத்தாலியில் பணிபுரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரம்பின் போர் அச்சுறுத்தல் ஒரு பக்கம்... ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்த ஈரான் News Lankasri