பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும் - நீர் பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எல்நினோ வானிலை முன்னறிவிப்பு காரணமாக, விவசாயிகள் மற்றும் அனைத்து நீர் பாவனையாளர்களும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என நீர்ப்பாசனத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
நாட்டின் 80 முக்கிய நீர்த்தேக்கங்கள் தற்போது அவற்றின் மொத்த கொள்ளளவில் சுமார் 48% அளவில் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹெரத் தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இதற்கிடையில், முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வெப்பக் குறியீடு எச்சரிக்கை அளவை எட்டியுள்ளதாக திணைக்களம் எச்சரித்துள்ளது.

வானிலை ஆய்வுத்திணைக்களம் வெளியிட்டுள்ள வெப்ப எச்சரிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், வெப்பமான வானிலைக்கு எதிராக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.