வியாபாரம் செய்ய கிளம்பிய முதியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
காலையில் வியாபாரத்துக்கு சென்ற முதியவர் ஒருவரிடம் இருந்த பணத்தை இருவர் பறித்துச் சென்றதாக வட்டுக்கோட்டை பொலிஸார் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று(11.07.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முதியவர் ஒருவர் காலையில் ஒரு தொகை பணத்துடன் வியாபாரத்திற்காக சென்றுள்ளார்.
முதியவர் மீது தாக்குதல்
இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள், முதியவரிடம் பாசாங்கு செய்து, அவரிடம் இருந்த பணத்தையும் பறித்துச் சென்றுள்ளனர்.

அத்துடன், முதியவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கக்கூடும் என முதியவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில், தாக்குதல் மேற்கொண்ட இளைஞர்கள் மீதான விசாரணைகளை மேற்கொள்வதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் பெரு வெள்ளம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய 8 வயது சிறுவன்: மகனை தேடி அலைந்த தாய் News Lankasri
வெனிசுலாவின் மொத்த எண்ணெய் வளத்தையும் கைப்பற்றும் அமெரிக்கா... ட்ரம்பின் புதிய ஒப்பந்தம் News Lankasri