வானிலையில் ஏற்படவுள்ள தற்காலிக மாற்றம்!
காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
நாளை மற்றும் 11 ஆம் திகதிகளில் நாட்டில் நிலவும் வறட்சியான வானிலையில் தற்காலிக மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டின் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரவில் மழை
குறிப்பாக குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இடைக்கிடையில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இன்று இரவு கிழக்கு கடலோரப் பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
காலை வேளையில் நாடு முழுவதும் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
