புதிய பொலிஸ் மா அதிபர் தொடர்பில் இன்று இறுதி முடிவு..
அரசியலமைப்பு பேரவை இன்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் பிற்பகல் 1:30 மணிக்கு சபை கூடவுள்ளது.
இதன்போது புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பான முன்மொழிவில், பேரவை கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதி முடிவு
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமாகவுள்ளது.
இந்தநிலையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பதில் பொலிஸ் அதிபர் இந்தப் பதவிக்கான வேட்பாளரை அரசியலமைப்பு சபைக்கு ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பார்.
அதன்படி, இன்றைய கூட்டத்தின் போது புதிய பொலிஸ் மா அதிபரை நியமிப்பது குறித்து அரசியலமைப்பு பேரவை இறுதி முடிவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரேணுக ஏகநாயக்க பதவி விலகல்
இதற்கிடையில், தேசிய பொலிஸ் ஆணையத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து ரேணுக ஏகநாயக்க பதவி விலகியுள்ளார்.
பதவி விலகல் கடிதம் ஏற்கனவே அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, தேசிய பொலிஸ் ஆணையத்தில் தற்போது இரண்டு உறுப்பினர் பதவிகள் வெற்றிடமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





சுவிட்சர்லாந்தில் 2 இந்தியர்களின் எதிர்பாராத சந்திப்பு: இணையத்தில் வைரலாகும் அழகிய தருணம்! News Lankasri

பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

நாங்கள் அழிந்தால்…பாதி உலகை சேர்த்து அழித்து விடுவோம்! உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் அச்சுறுத்தல் News Lankasri
