இனவாதத்தை தூண்டும் நடவடிக்கையினையே பொலிஸார் முன்னெடுக்கின்றனர்: கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு(Video)
இனவாதத்தை தூண்டிவிட்டு தமிழர்களின் உரிமையினை மறுப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மயிலத்தமடு விஜயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அனுமதி மறுப்பு
மயிலத்தமடுவிற்கு நேற்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உட்பட பலர் சென்ற நிலையில் பொலிஸாரினால் உட்செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதன்போது அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையிலான குழுவினர் வருகைதந்து விளைவித்த குழப்பத்தினை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து திரும்பிச்சென்றுள்ளனர்.
இந்த நிலையில் ஜனாதிபதி செயலாளரின் அறிவுறுத்தலையும் மீறிய வகையில் பொலிஸாரின் செயற்பாடுகள் காணப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
