T20 உலகக் கிண்ணத் தொடர் - நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்த இந்தியா
ஐசிசி டி 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் இன்றைய(18.02.2026) ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றியை தனதாக்கிக் கொண்டுள்ளது இந்தியா.
நாணய சுழற்சியின் போது வெற்றிப்பெற்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
எப்ஸ்டீன் கோப்புக்களில் சிக்கியுள்ள விடுதலைப் புலிகளின் தலைவருடன் புகைப்படத்தில் இருக்கும் இந்திய அதிகாரி
வெற்றி இலக்கு
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆட்டத்தின் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதனையடுத்து, 194 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய நெதர்லாந்து அணி ஆட்டத்தின் நிறைவில் 176 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்தநிலையில், 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான இன்றையப் போட்டியை இந்தியா வெற்றிகொண்டது.
இந்திய அணியின் சார்பில் துடுப்பெடுத்தாடிய ஷிவம் துபெ 66 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு வலு சேர்த்தார். மேலும், சூர்யகுமார் யாதவ் 34 ஓட்டங்களையும், திலக் வர்மா 31 ஓட்டங்களையும், ஹர்திக் பாண்ட்யா 30 ஓட்டங்களையும் பெற்று அணியை வெற்றியை நோக்கி நகர்த்திச் சென்றிருந்தனர்.
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam