நாட்டின் பொருளாதாரம் 1.6 சத வீதத்தால் வளர்ச்சி
இலங்கையின் ஜூலை முதல் செப்டெம்பர் வரையிலான காலாண்டில் பொருளாதாரம் 1.6வீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் ஒரு அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரம்
இலங்கையின் விவசாயத் துறையானது கடந்த ஆண்டை விட 3 வீதம் வளர்ச்சியடைந்துள்ளது, தொழில்துறை உற்பத்தியில் 0.3வீத அதிகரிப்பு, சேவைகள் 1.3 வீத அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் 2022 இல் 7.8வீத சுருங்கிய பின்னர் இந்த ஆண்டு 3.6வீதத்தால் சுருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கடந்த செப்டம்பரில் 70வீதமாக இருந்த பணவீக்கம் நவம்பரில் 3.4 வீதமாக சுருங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |