பாலஸ்தீனத்திற்கு தனி நாடு வழங்குவது குறித்து பேச இடமே இல்லை: இஸ்ரேல் ஜனாதிபதி பகிரங்க அறிவிப்பு
பாலஸ்தீனத்திற்கு தனி நாடு வழங்குவது குறித்து பேச இடமே இல்லை என இஸ்ரேல் ஜனாதிபதி பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் இடம்பெறவுள்ள வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடனான சந்திப்பிற்கு முன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம், போர் முடிந்த பின் இரு நாடுகளை உருவாக்குவது குறித்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அண்மையில் அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தது.
இதற்கு பதிலடி வழங்கும் முகமாக இஸ்ரேல் ஜனாதிபதியின் அறிவிப்பு அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரு நாடு தீர்வு
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் மூன்று மாதங்களாக தொடர்ந்து வரும் நிலையில் 'இரு நாடு' தீர்வினைப் பற்றி பேச இது நேரமில்லை என இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சார்க் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான பல ஆண்டுகாலப் பிரச்சினைக்கு மத்தியில், இரு நாடுகளை உருவாக்கும் முடிவினை எதிர்க்கும் இஸ்ரேல் அதிகாரிகளின் வரிசையில் ஐசக் ஹெர்சார்க் இணைந்துள்ளார் கூறப்படுகிறது.
வெள்ளை மாளிகைக்கு விஜயம்
“இஸ்ரேல் இன்னும் அக்டோபர் 7 தாக்குதலில் இருந்தே மீளவில்லை. மக்கள் அனைவரும் பயத்தில் உள்ளனர். மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பாலஸ்தீனத்திற்கென தனி நாடு உருவாக்கித் தருவது தொடர்பாக பேச முடியாது என இஸ்ரேல் ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம், போர் முடிந்த பின் இரு நாடுகளை உருவாக்குவது குறித்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam

6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
