வொஷிங்டனில் பரபரப்பு: ட்ரம்ப் - எப்ஸ்டீன் உருவங்கள் அடங்கிய 'டைட்டானிக்' பாணி சிலை
அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி. பகுதியில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மறைந்த தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் ஆகியோரைச் சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய சிலை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. '
டைட்டானிக்' திரைப்படத்தின் புகழ்பெற்ற காட்சியைப் பிரதிபலிக்கும் வகையில், கப்பலின் முகப்பில் இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற இந்தச் சிலை, ஒரு லொறியின் பின்புறத்தில் வைத்து பொது இடத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
ட்ரம்ப் - எப்ஸ்டீன் உருவங்கள்
சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய எப்ஸ்டீன் விவகாரத்துடன் ட்ரம்ப்பைத் தொடர்புபடுத்தி, நையாண்டி செய்யும் நோக்கில் இந்தப் படைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தச் சிலை வைக்கப்பட்ட இடத்திற்கு அருகில் திரண்ட பொதுமக்கள் பலர், இதனைப் புகைப்படம் எடுத்தும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தும் வருகின்றனர்.
அதேவேளையில், அரசியல் ரீதியாகத் தூண்டப்பட்ட இத்தகையச் செயல்கள் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாக ஒரு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சிலையை உருவாக்கியவர்கள் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகாத நிலையில், இது வெறும் கலை வெளிப்பாடா அல்லது அரசியல் உள்நோக்கம் கொண்ட பிரசாரமா என்ற விவாதங்கள் அமெரிக்க ஊடகங்களில் தீவிரமடைந்துள்ளன.
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam