உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல்
திருகோணமலை
தியாக தீபம் அன்னை பூபதியின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலையில் (Trincomalee) இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வு, திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் நேற்று (19) நடைபெற்றுள்ளது.
குறித்த அஞ்சலி நிகழ்வை திருகோணமலை ஒன்றினைந்த சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.
இதில், பல சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு அன்னையின் திருவுருவப் படத்திற்கு சுடரேற்றி அஞ்சலி
செலுத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு
தியாக தீபம் அன்னை பூபதியின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பில் (Batticaloa) உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, இன்று (20.04.2024) மாலை மட்டக்களப்பு நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதியில் இடம்பெற்றுள்ளது.
அன்னை பூபதியின் நினைவுப் பேரணியானது, இன்று மாலை கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி நாவலடியில் உள்ள அன்னையின் சமாதி வரையில் சென்றுள்ளது.
சிவில் சமூக அமைப்புக்கள்
பேரணியானது நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதியை அடைந்ததும் அங்கு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து நடத்திய இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் (Shanakkiyan), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் மற்றும் ஞா.சிறிநேசன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும், இந்நிகழ்வில் தியாகத்தாய் அன்னை பூபதியின் நினைவுப்பிரகடனத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர்
த.சுரேஷ் வெளியிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |