ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தையே அரசாங்கம் துரிதமாகக் கொண்டு வர வேண்டும்: சஜித்
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அன்றி ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தையே அரசாங்கம் துரிதமாகக் கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன் ஊடாக பன்டோரா பத்திரங்கள் ஊடாக அம்பலப்படுத்தப்பட்ட ஊழல்வாதிகள் மற்றும் கடந்த காலங்களில் பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊழல் ஒழிப்பு சட்டமூலம்
குறித்த சட்டமூலத்தைக் கொண்டுவருதன் மூலம் ஊழல்வாதிகளை உரிய முறையில் தண்டிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தற்போது அரசாங்கம் ஊழல்வாதிகளைப் பாதுகாக்கும் சட்டமூலத்தையே கொண்டுவர
முனைகின்றது என்றும், அதன் ஊடாக தமது உற்ற ஊழல்வாதி கூட்டாளிகளை அரசாங்கம் பாதுகாக்கத் திட்டமிட்டுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri
