ஒரே நாளில் இலங்கை மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! முச்சக்கரவண்டி கட்டணம் குறித்து வெளியான தகவல்
ஒரே நாளில் இலங்கையில் அடுத்தடுத்து பொருட்களின் விலைகள் அதிகரிப்பு குறித்து தகவல் வெளியாகி வரும் நிலையில் முச்சக்கரவண்டி பயணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையிலான செய்தியொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்கும் வகையிலான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவிக்கையில்,
முதல் கிலோமீட்டருக்கு 80 ரூபாவும், இரண்டாவது கிலோமீட்டருக்கு 50 ரூபாவும் முச்சக்கரவண்டி கட்டணமாக அறவிடப்படுவது நியாயமானது என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணிகளை கருத்தில் கொண்டு பார்க்கும் போது இது நியாயமான விலை அதிகரிப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி...
நள்ளிரவு முதல் மீளவும் எரிபொருள் விலை உயர்வு!
இலங்கையில் விமான பயணச் சீட்டு கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக அறிவிப்பு
இன்று நள்ளிரவு முதல் விலை அதிகரிப்பு! இலங்கையர்களுக்கு விழுந்த மற்றொரு அடி
இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு அதிகரித்த தங்கத்தின் விலை
பாண் மற்றும் உணவுப் பொதி கொள்வனவு செய்பவர்களுக்கு ஓர் அறிவிப்பு
மற்றுமொரு விலை அதிகரிப்பு குறித்து நிதி அமைச்சர் பகிரங்க அறிவிப்பு