மற்றுமொரு விலை அதிகரிப்பு குறித்து நிதி அமைச்சர் பகிரங்க அறிவிப்பு
லங்கா ஐஓசி நிறுவனம் போன்று ஏனைய நிறுவனங்களும் எரிபொருள் விலையை அதிகரிக்கலாம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருளுக்கான விலையை அதிகரித்ததை போன்று, ஏனைய நிறுவனங்களும் எரிபொருள் விலையை சிலவேளைகளில் அதிகரிக்கலாம்.
உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு பிரச்சினை முடியும் போது, மற்றுமொரு பிரச்சினை உருவாகின்றது.
தற்போது உக்ரைன் - ரஷ்யா யுத்தம் ஆரம்பித்துள்ளது. நிவாரணங்களை வழங்க நாம் முழுமையாக முயற்சித்து வருகின்றோம்.
மக்கள் எம்மீது கொண்ட நம்பிக்கையை அவ்வாறே வைத்திருக்குமாறு கேட்கின்றேன்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எமது அமைச்சர்கள் அனைத்து விதமான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
எனவே உள்நாட்டில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு எவ்வாறேனும் தீர்வொன்று பெற்றுக் கொடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
நேற்று நள்ளிரவு முதல் மீளவும் எரிபொருள் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்த நிலையிலேயே தற்போது ஏனைய நிறுவனங்களும் எரிபொருள் விலையை அதிகரிக்கலாம் என்ற தகவலை நிதி அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
May you like this Video
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri