பாண் மற்றும் உணவுப் பொதி கொள்வனவு செய்பவர்களுக்கு ஓர் அறிவிப்பு
இலங்கையில் உணவுப் பொதியொன்றின் விலை இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுவதாக அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி உணவுப் பொதியொன்றின் விலை 20 முதல் 30 ரூபாய் வரையில் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொத்து ரொட்டியின் விலையை 10 முதல் 15 ரூபாவினால் அதிகரிப்பதற்கும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
முதலாம் இணைப்பு
பாண் உட்பட அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளையும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி 450g பாண் ஒன்றின் விலை 20 தொடக்கம் 30 ரூபா வரையில் அதிகரிக்கப்படுவதுடன், பணிஸ் ஒன்றின் விலையானது பத்து ரூபாவல் அதிகரிக்கப்படுகிறது.
மேலும் பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கான மூலப்பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளதால் ஆயிரக்கணக்கான சிறிய பேக்கரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய பேக்கரிகளின் உரிமையாளர்கள் கடும் சவாலுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என கூறியுள்ளார்.