மோடிக்கு நன்றி தெரிவித்து இலங்கையிலிருந்து பறந்த கடிதம்
டிட்வா சூறாவளி காரணமாக இலங்கையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளுக்குப் பிறகு இந்தியா வழங்கிய விரைவான உதவிகளுக்கு நன்றி தெரிவித்து, இலங்கையின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, இந்திய உயர்ஸ்தானிகரிடம் கடிதம் ஒன்றை ஒப்படைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில், பேரிடருக்குப் பிறகு முதலில் உதவிய நாடாக இந்தியா இருந்ததை அவர் பாராட்டியுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
ஒபரேஷன் சாகர் பந்து திட்டத்தின் கீழ் அவசர நிவாரணப் பொருட்கள், பேரிடர் மேலாண்மை ஒருங்கிணைப்பு மற்றும் தளவாட ஆதரவு வழங்கப்பட்டதை, காவிந்த, தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2022 பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் உதவியையும், அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
இதற்காக, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் கொழும்பு உயர்ஸ்தானிகரக அதிகாரிகளின் பங்களிப்பையும் அவர் பாராட்டியுள்ளார்.