பத்தேகம இரட்டைக்கொலை! இரகசியமாக தகவல்களை சேகரித்த மூன்று சந்தேகநபர்கள் கைது
காலி - பத்தேகமவில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு உதவியமை, உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்பிட்டிய பிரதேச குற்றப் புலனாய்வுப்பணியகம் நடத்திய நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலைக்கான பின்னணி
பத்தேகம, ஹல்பாதொட பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியை இலக்கு வைத்து நேற்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

ஒழங்கமைக்கப்பட்ட குற்ற கும்பலை சேர்ந்த லொகு பெட்டியின் முக்கிய போட்டியாளரும் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளவருமான 'கரந்தெனிய சுத்தாவினுடைய' தரப்பினால் நடத்தப்பட்டிருக்காம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த இரட்டைக்கொலைக்கு முந்தைய நாள், மித்தெனிய பொலிஸ் அதிகாரிகள் நடத்திய தேடுதல் வேட்டையின் போது, சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேகத்திற்கிடமான நடத்தை காரணமாக, இரத்தினபுரி, கஹவத்தையைச் சேர்ந்த 21 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
விசாரணையில் வெளியான தகவல்
இருப்பினும், பொலிஸ் அதிகாரிகள் அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.

அவர்கள் தங்களது தேசிய அடையாள அட்டைகளையும், தாங்கள் பயணித்த முச்சக்கர வண்டியின் ஆவணங்களையும் முறையாகச் சமர்ப்பித்த பின்னர், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், நேற்று பத்தேகம, ஹல்பாதோட்டாவில் நடந்த இரட்டைக் கொலைக்கு பிறகு மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, இவர்கள் முந்தைய நாள் மித்தெனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட சந்தேகநபர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் கொலைக்கு முன்னர் தகவல்களை சேகரித்துள்ளதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஜெயிலர் 2 பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற இத்தனை கோடி வசூல் வேண்டுமா.. மிகப்பெரிய இலக்கு! சாதிப்பாரா ரஜினிகாந்த் Cineulagam