மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : 20 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்...
காலி, இமதுவ, அங்குலுகஹா சந்தியில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்கு உள்ளானதில் 29 பேர் வரை காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் இன்று (26) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டு தனியார் பயணிகள் பேருந்துகளும், அலுவலக ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் ஒன்றுமே விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
நிறுத்தப்பட்டிருந்த பேருந்தொன்றில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து மோதியதுடன், அதன் பின்னால் வந்த மற்றொரு பேருந்து அதன் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் 29 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் 23 பேர் இமதுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 06 பேர் கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Photos Credits - Accident First
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
