இஸ்ரேல் குறித்து பலஸ்தீனம் விடுத்துள்ள அவசர கோரிக்கை
இஸ்ரேல் மேற்கொள்ளும் விரிவாக்க நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்காக சர்வதேச சமூகம் தீவிரமான மற்றும் நடைமுறைசார்ந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பாலஸ்தீன பிரதமர் முகமது முஸ்தபா வலியுறுத்தியுள்ளார்.
காசா பகுதியின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் குற்றச்செயல்கள் மேற்கு கரையிலும் மீண்டும் நடைபெறக்கூடும் என்ற எச்சரிக்கையையும் அவர் வெளியிட்டார்.
கனடா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த கருத்துகளை அவர் தெரிவித்துள்ளார்.

காசா அமைதி செயல்முறையின் இரண்டாம் கட்டத்தை நிலைநிறுத்துவதற்கும், மேலும் போர் வெடிப்பதைத் தடுக்கவும், அத்துடன் காசா பகுதியில் மீட்பு மற்றும் மறுகட்டுமான பணிகளை விரைவுபடுத்தவும் சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என பிரதமர் முஸ்தபா வலியுறுத்தினார்.
ஸ்திரமான சமாதானத்தை நிலைநாட்ட சர்வதேச சமூகத்தின் பொறுப்புணர்வான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri